Monday, 21 November 2011

உங்களுக்காக

ஓட்டமும்  நடையுமான என் பயணங்களில்
சிரத்தையின்றி நான் கேட்கும் உரையாடல்களில்
ஒரு சில வார்த்தைகள்
உங்களை நினைவுகூறும்
 என் நிகழ்காலம் நிறுத்த வைக்கும்
 நினைவுகள்  நோக்கி ஓட வைக்கும்
ஓயாமல் பெய்த மழை
ஒருவழியாய்  நிரப்பி சென்றது பள்ளங்களை
இன்னும் சிலரின் உள்ளங்களை.....
ஆம்....
புது மழை கழுவிச் சென்றது
என் புழுதி படிந்த நினைவுகளை
நிரம்பி வழிந்த  நினைவுகளால்
சலசலக்கும் சிலர் நெஞ்சம்
சத்தமில்லாத சில வார்த்தைகளோடு
இதோ என் சலசலப்பு........

Friday, 4 November 2011

நான் இன்று....

பிறப்பிடம் தொலைத்து
பிழைப்பிடத்தில்  
மாசுகளுக்குக்கிடையில்  மக்கள் தேடுகிறேன்
மக்களிடையே மனிதம் தேடுகிறேன்
காலத்தை சேமிக்க சுவாசிக்க மறக்கிறேன்
திடீரென்று நினைவு  வந்து
பெருமூச்சு விடுகிறேன்
பசுமை தேடி அலைகிறேன்
பார்த்துவிட்டால் தனிமையில் சிரிக்கிறேன்
சில நேரம்,
மரங்களுக்கு கால்கள் இல்லையென
மனம் நோகிறேன்
கால்தடுக்கும் இடம் கல்லறை என
காணும் இடமெல்லாம் சாலைகள்
காட்சிகளெல்லாம் விபத்துகள்
 
அவசரங்களுக்கு மத்தியில்
அரிதாய் ஒரு புன்னகை
அடிக்கடி சிரிப்பது உடலுக்கு நல்லதாம்!!!!
அதற்காக........