Thursday, 22 September 2011

உறக்கம்

காதலில் காத்திருக்கும் இமைகள் இரண்டும்
கைகோர்க்கும் தருணமிது ..
தற்காலிக மரணமிது
விலை கொடுக்காமலே வேண்டியது கிடைக்கும்
விந்தை உலகமிது வேற்று கிரகமிது..
உயிர்கள் அனைத்தும் அழகாவது உறக்கத்தில் மட்டுமே
ஆம்,
மழலை மொழியினும்  மழலை தூக்கம் மனம் மயக்கும்
கற்பனையும் கருத்துகளும் சிலருக்கு கிடைப்பது இங்கேதான்
மறந்துவிட்ட முகங்களை மனம் அசைபோடுவதும் இங்கேதான்
உறக்கம் -இது மாயை
                      இது மயக்கம்
                      இது மௌனம்
மீண்டும் மீண்டும் சாகத்தோன்றும்  தற்காலிக மரணம் .......... 

Wednesday, 14 September 2011

இறகு

பறப்பதை மறந்து தரையோடு தங்கிடாது
இது,
       உயிருள்ள பறவையை பிரிந்த  
       ஒற்றை சிறகு

உன்னை வழியனுப்பிய பின்....

உவகை என்பது இதுதானா ?
என் கண்களும் சிரிப்பது உண்மைதானா?
தனிமையின் அவஸ்தை உன் வருகையில் உணர்ந்தேன்
மீண்டும்  தனிமைப்படுத்தப்பட்டால்???
நான் உவகை கொள்வது எப்போது..
அல்லது
உன் வருகை தான் எப்போது.....
இதுவரை என் நிலத்தில் பொழிந்த ஒற்றை மேகம் நீ
இடம்மாறி போய்விட்டாய்,
இனி,
என் நிலத்தில் பொழியப்போவது எந்த மேகமோ ??????
 

என் சாலை ஓர மரங்கள்

நேற்று  நீ பார்த்து ரசித்து போன இலைகள்
உன் பிம்பம் பிரதிபலிக்கும் ,
         இன்று நான் நின்று ரசிக்கும்போது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது தளிர்கள் ,
        உன் பிம்பம் தாங்கும் கண்ணாடியாக ...
அழகாக்கும் நோக்கத்தில் அழிக்கபடுகிறது ஓர்நாள்
தளிரிழந்த தாய் இலைகளும் ,
தாங்கி  நின்ற வேர்களும் ,
வரவேற்கிறது என்னை வாட்டத்துடன்
நானும் வாடினேன்,
         தளிர் ஒன்றில் உன் கண்கள் இருந்த இடம் காணவில்லை ஆதலால் ...