நேற்று நீ பார்த்து ரசித்து போன இலைகள்
உன் பிம்பம் பிரதிபலிக்கும் ,
இன்று நான் நின்று ரசிக்கும்போது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது தளிர்கள் ,
உன் பிம்பம் தாங்கும் கண்ணாடியாக ...
அழகாக்கும் நோக்கத்தில் அழிக்கபடுகிறது ஓர்நாள்
தளிரிழந்த தாய் இலைகளும் ,
தாங்கி நின்ற வேர்களும் ,
வரவேற்கிறது என்னை வாட்டத்துடன்
நானும் வாடினேன்,
தளிர் ஒன்றில் உன் கண்கள் இருந்த இடம் காணவில்லை ஆதலால் ...
No comments:
Post a Comment