உன் அருகாமையில்
உலகிலிருந்து தொலைகிறேன்
உயிரை பிரிகிறேன்
உன் தூரங்களில்
சார்ந்திருக்கிறேன் அல்லது
காத்திருக்கிறேன்
உன் பார்வையில்
ஒவ்வொரு செல்லிலும்
இன்னொரு நானாகிறேன்
உன் பிரிவில்
கலங்குகிறேன்,என் கண்ணீர் குடிக்கும்
உன் விரலுக்காய்
உன் கோபத்தில்
நானும் என் சுவாசமும்
ஒன்றாய் உறைகிறோம்
உன் சிரிப்பில்
என் உறைநிலை சுவாசத்தை
உருக்குகிறேன்
உன் பொய்களில்
உண்மை மறக்கிறேன்
ஊமை ஆகிறேன்
உன் உறக்கத்தில்
மற்றொரு உன்னை காண்கிறேன்
மழலை செய்கையில்.....
No comments:
Post a Comment